Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இமெயில் குட்டை பாவடை போல் இருக்க வேண்டுமாம்; சர்ச்சையான டெல்லி பல்கலைக்கழக பாடம்

இமெயில் குட்டை பாவடை போல் இருக்க வேண்டுமாம்; சர்ச்சையான டெல்லி பல்கலைக்கழக பாடம்
, வியாழன், 8 ஜூன் 2017 (15:33 IST)
இமெயில் குட்டை பாவடை போல் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


 

 
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பி.காம் பட்டப்படிப்பில் பேசிக் பிசினஸ் கம்யூனிகேஷன் என்ற புத்தகம் பல ஆண்டுகளாக உள்ளது.
 
டெல்லி கல்லூரி வணிகத் துறை முன்னாள் துறைத் தலைவர் சி.பி.குப்தா என்பவர்தான் இந்த புத்தகத்தை எழுதியவர். இந்த புத்தகத்தில் இமெயில் எப்படி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இமெயில் குட்டை பாவடை போல் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று உள்ளது.
 
இமெயிலுக்கு எதற்கு குட்டை பாவடையை ஒப்பிட வேண்டும். தற்போது இமெயில் குறித்து எழுதப்பட்ட பக்கம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக மாணவர்கள் இதையே படித்து வந்துள்ளனர். யாரும் இதுகுறித்து கேள்வி கேட்கவில்லை என்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து இந்த புத்தகம் எழுதிய சி.பி.குப்தா வருத்தம் தெரிவித்துள்ளார். இதை நான் சொந்தமாக எழுதவில்லை, வெளிநாட்டு புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் புத்தகங்களில் இந்த வாக்கியம் அச்சடிக்கப்படாது என்றும் குப்தா உறுதியளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் நமக்கு சரி வராது: பிரபல நடிகர் முடிவு!!