Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்வி விழிப்புணர்வு - உதவி கலெக்டரை சந்தித்த விஜய்

கல்வி விழிப்புணர்வு - உதவி கலெக்டரை சந்தித்த விஜய்

கல்வி விழிப்புணர்வு - உதவி கலெக்டரை சந்தித்த விஜய்
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:54 IST)
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உதவி கலெக்டராக இருப்பவர் உமேஷ் கேசவன். அவர் அட்டப்பாடியிலுள்ள பழங்குடி மக்கள் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் இருப்பதையும், கல்வி கற்க அவர்கள் ஆர்வம் காட்டாதையும் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 
 
 
அட்டப்பாடி மக்களுக்கு தெரிந்ததெல்லாம், வேலையில்லாத நாளில் நடிகர் விஜய்யின் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்ப்பதுதான். அரசின் அடிப்படை வசதிகள் எதுவும் சென்றடையாத அந்த கிராமத்தை நடிகர் விஜய் சென்றடைந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார். அட்டப்பாடி பழங்குடியினரிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் விஜய்யை சந்தித்து பேசவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். 
 
இந்நிலையில், உமேஷ் கேசவனை படப்பிடிப்புதளத்துக்கு வரவழைத்து அவரை சந்தித்தார் விஜய். இருவரும் நீணட நேரம் உரையாடினர். விரைவில் விஜய் அட்டப்பாடிக்கு செல்வார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஜிட்டலில் வெளியாகும் ஜெயலலிதா திரைப்படம்