Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்திரன் படக் கதைத் திருட்டு வழக்கு… இயக்குனர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்!

vinoth
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (09:33 IST)
இயக்குனர் ஷங்கர் தற்போது தன்னுடைய திரைவாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் உள்ளார். அடுத்தடுத்து அவர் இயக்கிய இந்தியன்2 மற்றும் கேம்சேஞ்சர் படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன. இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக திரைவட்டாரத்தினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இன்னொரு சிக்கலாக அவரின் 11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. அவர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு அமலாக்கத்துறையாலும் தனியாக விசாரிக்கப்பட்ட நிலையில் இப்போது ஷங்கரின் சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.

இது சம்மந்தமாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் ஆருர் தமிழ்நாடன் எழுதிய திக்திக் தீபிகா என்ற நாவலுக்கும் எந்திரன் படத்தின் கதைக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கண்டறிந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியை நான் டேட்டிங் செய்கிறேனா?... ஜி வி பிரகாஷ் அளித்த பதில்!

ஏ ஆர் ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவிற்கு மும்பையில் அறுவை சிகிச்சை!

தொடங்கியது பிரசாந்த் நீல்& ஜூனியர் NTR இணையும் படத்தின் ஷூட்டிங்!

ரி ரிலீஸாகவுள்ள சேரனின் ‘ஆட்டோகிராஃப்’… AI மூலமாக உருவாக்கப்பட்ட புது டிரைலர்!

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments