Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிரத்னம் படத்திலிருந்து விலகிய துல்கர் சல்மான்

மணிரத்னம் படத்திலிருந்து விலகிய துல்கர் சல்மான்
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (16:23 IST)
மணிரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் நடிப்பதாக கூறப்பட்டது.


 

 
தற்போது, துல்கர் சல்மான் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்.
 
மணிரத்னம் இந்தப் படத்தை தமிழில் மட்டும் எடுப்பதாக இருந்தார். இப்போது திட்டத்தை மாற்றி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்க முடிவு செய்துள்ளார். அதனால் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குப் பதில் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போயுள்ளது.
 
துல்கர் சல்மான் இப்போது சார்லி, கலிப்பு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதையடுத்து பிரதாப் போத்தன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இன்னொரு படத்துக்கும் கால்ஷீட் தந்துள்ளார். இந்த கமிட்மெண்ட்கள் காரணமாக அவர் மணிரத்னம் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
 
இந்தத் தகவலை மணிரத்னம் தரப்போ, துல்கர் சல்மானோ இதுவரை உறுதி செய்யவில்லை என்பதுடன் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil