துல்கர் சல்மான் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக ‘லக்கி பாஸ்கர்’!

vinoth
செவ்வாய், 5 நவம்பர் 2024 (14:12 IST)
சீதாராமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் துல்கர் சல்மான். அதனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகின்றன. அவர் நடிப்பில் உருவான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது.

இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பீரியட் படமாக உருவாகியுள்ள வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். பங்குச் சந்தை ஊழலில் வங்கிகளின் பங்கு என்ன என்பது குறித்து இந்த படம் பேசியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த படம் இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை துல்கர் சல்மான் கேரியரில் எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை லக்கி பாஸ்கர் படைத்து வருகிறது. விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை இந்த படம் எட்டும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments