Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:27 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து துல்கர் சல்மானின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் அவர் நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை. அதனால் பாக்ஸ் ஆபிஸில் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து இந்த படம் 30 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments