Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 1 முதல் மீண்டும் களம் இறங்குகிறார் அஜித்!

Webdunia
புதன், 31 மே 2017 (04:40 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இரவுபகலாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளதாம்



 


ஆம், நாளை முதல் அதாவது ஜூன் 1 முதல் டப்பிங் பணியை ஆரம்பிக்க இயக்குனர் சிறுத்தை சிவா முடிவு செய்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக அஜித் நாளை முதல் டப்பிங் செய்யவுள்ளாராம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளது. அஜித்துக்கு பின்னர் காஜல் அகர்வால், அக்சராஹாசன் ஆகியோர் டப்பிங் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது

இதனிடையே இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தமிழக உரிமையை மொத்தமாக யாரிடமும் கொடுக்காமல் சத்யஜோதி நிறுவனமே நேரடியாக ஒவ்வொரு பகுதிக்கும் விலை பேசி வருகிறது. இந்த படத்தின் தமிழக உரிமை மட்டும் ரூ.60 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடாமுயற்சி’ முதல் நாள் வசூல் எத்தனை கோடி? ஆச்சரியமான தகவல்..!

மகேஷ் பாபு படத்தில் வில்லனே இவர்தானா?... செம்ம ஸ்கெட்ச் போட்ட ராஜமௌலி!

மங்காத்தா படத்தில் ஏமாற்றியதற்காக விடாமுயற்சி படத்தில் அஜித்தை பழிவாங்கி விட்டாரா த்ரிஷா?

விளம்பரமே இல்லாமல் சைலண்ட்டாக ஓடிடியில் வெளியானது ஷங்கரின் கேம்சேஞ்சர்!

விடாமுயற்சி முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments