லிங்குசாமி படத்தில் ஒப்பந்தமான இசையமைப்பாளர்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (11:05 IST)
லிங்குசாமி தெலுங்கில் இயக்க உள்ள படத்துக்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி அதன்பின் ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது .இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக உப்பேன்னா படத்தில் நடித்திருந்த கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

இதையடுத்து இப்போது இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பின் லிங்குசாமி இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments