Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய், ஸ்ருதி பாடிய பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பித்த தேவி ஸ்ரீபிரசாத்

விஜய்,  ஸ்ருதி பாடிய பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பித்த தேவி ஸ்ரீபிரசாத்
, சனி, 25 ஜூலை 2015 (12:45 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி, ஹன்சிகா,  ஸ்ரீதேவி, சதீப் நடித்துள்ள படம், புலி. தேவி ஸ்ரீபிரசாத் இசைமைத்துள்ளார். நேற்று இந்தப் படத்தில் இடம்பெற்ற, ஏண்டி ஏண்டி என்ற பாடல் வெளியானது. விஜய், ஸ்ருதி இணைந்து அந்தப் பாடலை பாடியிருந்தனர்.
 
பாடல் டீஸரில் பேசியுள்ள தேவி ஸ்ரீபிரசாத், அந்தப் பாடலை இளையராஜாவுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டிருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இளையராஜாவின் தீவிர ரசிகர். அவர் டீஸரில் கீழ்கண்டவாறு பேசியுள்ளார்.
 
"என்னுடைய இசையில் விஜய்யும், சுருதிஹாசனும் ‘ஏண்டி ஏண்டி’ என்னும் பாடலை பாடியிருக்கிறார்கள். மிகவும் மெலோடியான இந்த பாடல் அருமையாக வந்திருக்கிறது. நான் தீவிர கிட்டார் பிரியன். கிட்டார் இசையில் மிகவும் ரொமான்டிக்கான பாடலை உருவாக்கியிருக்கிறேன். இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமர்பிக்கிறேன். இந்த பாடல் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்"  என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil