Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருஷ்யம் 3 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஜீத்து ஜோசப்!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (14:42 IST)
2013 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த பிரம்மாண்ட வெற்றியால் சீனாவின் மாண்டரின் மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதையடுத்து திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலிஸாகி வெற்றி பெற்று, இப்போது அதுவும் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது. சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்தி வெர்ஷன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் திருஷ்யம் மூன்றாம் பாகம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஜீத்து ஜோசப் “திருஷ்யம் 3 ஆம் பாகத்தின் கிளைமேக்ஸ் ஐடியா மட்டுமே உள்ளது. அதற்கேற்றார்போல கதை செய்ய வேண்டும். இந்த மூன்றாம் பாகத்தோடு கதை முடிந்துவிடும்” எனக் கூறியுள்ளார். இப்போது மோகன்லால் நடிப்பில் “ராம்” என்ற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் "இன்ஃபிளுன்செர்"

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

தனுஷுக்காகவே பிரத்யேகமான ஒரு கதையை எழுதி வருகிறேன்… லப்பர் பந்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!

மீண்டும் முயற்சிக்கிறோம்… விவகாரத்து முடிவைக் கைவிட்ட சாய்னா நேஹ்வால்!

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹெச் ராஜா… ’கந்தன் மலை’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments