Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் ரிலிஸ் புரளி… கடுப்பான தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (09:42 IST)
டாக்டர் படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக சமூகவலைதளங்களில் வெளியாகும் புரளிகளைப் பார்த்து அதன் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் கடுப்பில் உள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

இது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்போது கே ஜே ஆர் ராஜேஷ் மறுத்துள்ளாராம். விரைவில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளாராம். இந்நிலையில் இன்னும் ரிலீஸ் தேதியே முடிவாகாத நிலையில் தீபாவளி அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எதுவுமே உண்மை இல்லை என்றும் இது போன்ற வதந்திகள் எல்லாம் எப்படி பரவுகின்றன என்றும் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் கோபத்தில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments