Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜா - சமுத்திரகனிக்கு விஜயகாந்த் வாழ்த்து

இளையராஜா - சமுத்திரகனிக்கு விஜயகாந்த் வாழ்த்து

இளையராஜா - சமுத்திரகனிக்கு விஜயகாந்த் வாழ்த்து
, செவ்வாய், 29 மார்ச் 2016 (05:14 IST)
தேசிய திரைப்பட விருது பெற்ற இளையராஜா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட அனைவருக்கும் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானியும், மறைந்த டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வழித்தோன்றலாக  கருதப்படும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
 
அதேபோல, இந்தியாவின் 63 ஆவது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது பெற்ற விசாரணை திரைப்பட குழுவிற்கும், சிறந்த பின்னணி இசை அமைப்பாளருக்கான விருது பெற்ற இளையராஜா-வுக்கும், சிறந்த துணைநடிகருக்கான விருது பெற்ற இயக்குனர் சமுத்திரகனிக்கும், சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது பெற்ர இறுதிச்சுற்று பட நடிகை ரித்திகா சிங்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள  பாகுபலி படக்குழுவினருக்கு கிடைத்துள்ளது, சிறந்த எடிட்டருக்கான விருது மறைந்த கிஷோருக்கும் கிடைத்துள்ளது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவர்களுக்கு எனது  மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil