Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவளி போட்டியில் இணைந்த சைத்தான்

தீபாவளி போட்டியில் இணைந்த சைத்தான்

தீபாவளி போட்டியில் இணைந்த சைத்தான்
, திங்கள், 19 செப்டம்பர் 2016 (17:58 IST)
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் சைத்தான் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

 
விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சைத்தான். பிரதீப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்.
 
இப்படத்தின் தமிழக உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றி இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் செப்டம்பர் 23ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.
 
இறுதிகட்ட பணிகள் தாமதத்தால், தற்போது தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீஸர், செப்டம்பர் 19ம் தேதி இன்று வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தையாவை ஜோக்கராக்கிய சூர்யா...?