Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினியோகஸ்தர்கள் போர்க்கொடி - வெளியாகுமா சண்டக்கோழி2?

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (16:28 IST)
விஷால் நடித்துள்ள சண்டக்கோழி படத்தை வெளியிட மாட்டோம் என வினியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்திசுரேஷ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்த சண்டக்கோழி2 நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தை நாளை வெளியிட மாட்டோம் என வினியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில், புதிய படங்களை தியேட்டர்களில் திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பது தொடர்பாக, 10 தியேட்டர்களுக்கு புதிய படங்கள் திரையிட விஷால் தடை விதித்தார். இதனால், சில தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகவில்லை. 
 
இதனால், ஆத்திரமடைந்த வினியோகஸ்தர்கள் சங்கத்தினர், எங்களிடம் ஆலோசனை செய்யாமல் விஷால் தன்னிச்சையாக இந்த முடிவெடுத்துள்ளார். எனவே, நாளை சண்டக்கோழி2 படத்தை வெளியிடக்கூடாது என முடிவெடுத்துள்ளோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
 
எனவே, பஞ்சாயத்து முடிந்து சண்டக்கோழி2 படம் நாளை வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments