Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்டிரிம் செய்கிறது!!

J.Durai
புதன், 9 அக்டோபர் 2024 (08:38 IST)
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான "வாழை" திரைப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பாக அனைவராலும்  கொண்டாடப்பட்டது. 
 
இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்  கொண்டு,  இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது.
 
தன் விதவை தாய் (ஜானகி) மற்றும் அவரது மூத்த சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வசிக்கும் இளம் சிறுவன் சிவனைந்தனின் (பொன்வேல்) வாழ்க்கையைச் சுற்றி, இப்படத்தின் கதை சுழல்கிறது.
 
சிவனைந்தனின் தாய் மற்றும் சகோதரி இருவரும் வாழை வயல்களில் கூலிகளாக கடுமையாக உழைக்கிறார்கள், மேலும் சிறுவன் சிவனைந்தனும் பள்ளி விடுமுறை தினங்களில், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
 
ஒரு நாள், சிவனைந்தனின் தாயார் நோய்வாய்ப்பட்டு, அவருக்குப் பதிலாக தனது இளம் மகனை வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'வாழை"
 
இப்படத்தில் குழந்தை நட்சத்திரமான பொன்வேல் கதாநாயகனாக நடித்துள்ளார் மற்றும் நடிகர்கள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் கலையரசன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் மற்றும் இசை சந்தோஷ் நாராயணன். கலை இயக்கம் குமார் கங்கப்பன் மற்றும் படத்தொகுப்பு சூர்யா பிரதாமன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.
 
முழுக்க முழுக்க திருநெல்வேலியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே, அப்பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை,ஆழமாக பிரதிபலிக்கிறது.
 
இத் திரைப்படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், ஸ்ட்ரீம் செய்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக்!!

தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவரது பிறந்த நாளை கொண்டாடிய கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள்!

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம்,மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கலந்து கொண்டனர்!

சப் டைட்டிலில் ஒலிக்குறிப்புகளோடு வெளியாகிறது வேட்டையன் திரைப்படம்.. லைகா நிறுவனம் அறிவிப்பு!

27 ஆண்டுகள் போராடி தன்னுடைய நிலத்தைப் பெற்றார் கவுண்டமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments