Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்ட் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (09:40 IST)
உலக புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்ட எபிசோட் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். பியர் க்ரில்ஸ் என்பவர் பல நாடுகளிலும் உள்ள காடுகளுக்குள் சென்று தனி ஆளாக அங்கு கிடைப்பவற்றை உண்டு வாழ்ந்து திரும்புவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம்.

உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி ஒளிபரப்பப்படுவதாக டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments