Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"மத நம்பிக்கை விஷயத்தில் எனக்கும் அப்பாவிற்கும் கருத்து வேறுபாடு"

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (11:34 IST)
மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்துஉள்ளது என நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் கூறினார்.

இது தொடர்பாக அவர் பேட்டியில் ‘‘நான் சினிமாவில் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்தவை. இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவே இருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.
மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் ‘ஸ்ப்ரிச்சுவல்’ சக்தி ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதில் இல்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.
 
சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான். தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் இந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்." இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments