Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? அமலாபாலுக்கு அதிர்ச்சி!!

விரைவில் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? அமலாபாலுக்கு அதிர்ச்சி!!
, திங்கள், 27 பிப்ரவரி 2017 (12:04 IST)
நடிகை அமலா பாலிடம் இருந்து விவாகரத்து பெற்ற இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
நடிகை அமலா பாலுக்கும், இயக்குனர் விஜய்க்கும் காதலித்து கடந்த 2014 ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமலா பால் சினிமாவில் நடிப்பதை விஜய் குடும்பத்தினர் விரும்பவில்லை. 
 
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இருவரும் பேசி சுமூகமாக பிரிந்து விடுவது என்று முடிவு செய்தனர். 
 
விவாகரத்து கோரி கடந்தாண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பின்னர் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் விஜய்க்கு இதில் உடன்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை ஜுடோபியா வென்றுள்ளது!