அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (19:11 IST)
நடிகை சாய்பல்லவி தமிழில் கரு படம் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் விஜய். இந்த படம் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 
 
இசை வெளியீட்டு விழாவில் சாய் பல்லவி குறித்து இயக்குனர் விஜய் பேசியதாவது, பிரேமம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், சாய் பல்லவி புதுப் படங்கள் எதையும் கமிட் பண்ணாமல் இருந்தார். சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த வேளையில் இந்தப் படத்துக்காக அவரை அணுகினேன். முதல் சந்திப்பிலேயே மறுத்து விட்டார். பிறகு முழுக் கதையையும் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். இந்த படத்தின் பலமே சாய் பல்லவிதான். 
 
நயன்தாராவை வைத்து எப்படி அறம் படம் வெளியானதோ அதேபோல் சாய் பல்லவியை மையமாக வைத்து கதை எழுதும் வகையில் இவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என கூறினார். நயன்தாரா இந்த நிலைமைக்கு வர இத்தனை வருடங்கள் ஆன நிலையில், சாய் பல்லவி நடிக்க துவங்கிய சில படங்களிலேயே இந்த பெயரை பெற்றுள்ளாதால் சாய் பல்லவி பூரிப்பில் உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments