என்னுடைய திரைக்கதையை வாங்கிக்கொண்டு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை… வெற்றிமாறன் மீது விடுதலை கதாசிரியர் குற்றச்சாட்டு!

vinoth
சனி, 14 டிசம்பர் 2024 (08:49 IST)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலக்கதையை எழுதியவராக டைட்டில் கார்டில் இடம்பெற்றுள்ள இயக்குனர் தங்கம் வெற்றிமாறன் மீது அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில் “என்னுடைய வேங்கச்சாமி திரைக்கதைக்காக நான் 8.25 லட்சம் செலவு செய்து உருவாக்கினேன். அந்த திரைக்கதையை நான் படமாக்குகிறேன் என வெற்றிமாறன் வாங்கினார். நான் முதலில் மறுத்தாலும் பின்னர் பழங்குடி அரசியலைப் பேசும் ஒரு படம் வரவேண்டும் என அவரிடம் கொடுத்தேன்.

ஆனால் இப்போது விடுதலை படங்களில் எனக்கு மூலக்கதை என டைட்டில் போடுகிறார். இப்படி சொல்லியா அவர் என்னிடம் திரைக்கதையை வாங்கினார். அது குறித்து நான் குற்றச்சாட்டுகளை வைத்தால் வெற்றிமாறனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்னை மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதில் ஒருவர் என்னை வீடுபூந்து அடிப்பேன் என்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் நான் இயக்கிய ‘காற்றின் தீராதப் பக்கங்களில்’ ஆவணப்படத்தில் இருந்து நான் வெளியேறயவும் இதுபோன்ற ஆட்கள்தான் காரணம்.  பாசிசத்துக்கு எதிராகப் படம் எடுப்பதாக சொல்லிக்கொள்ளும் வெற்றிமாறன் ஒரு பாசிஸ்ட் போல நடந்து கொள்கிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments