Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம் எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கை நான் இயக்குகிறேனா?... விஜய் பட இயக்குனர் பதில்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (14:43 IST)
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம்.

இந்த படத்தை திருமலை, சுள்ளான் மற்றும் ஆதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரமணா இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்த நிலையில் தன்னுடைய முகநூல் பதிவில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவரின் பதிவில் “அன்பு முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். நான் கர்னாடக பாடகி திருமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களின் வாழ்கையை படமாக்குவதாக வலைத்தளங்களில் செய்தி வந்திருப்பதாய் அறிகிறேன், அதன் தொடர்பாய் என் நலம் விரும்பும் நண்பர்கள் வாழ்த்துகளை அனுப்பியவண்ணம் உள்ளனர்… ஆனால் அந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக நான் அறிவிக்கவில்லை என்பதையும், நண்பர்கள் அச்செய்தியை பகிரவேண்டாம் என்றும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.” என விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments