Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ராம் &மிர்ச்சி சிவா கூட்டணியின் ‘பறந்து போ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 13 மே 2025 (08:42 IST)
இயக்குனர் ராம், நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. மார்ச் மாதம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலீஸ் தள்ளிப் போய் இதுவரை புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் கைப்பற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவை வைத்து படமெடுத்தால் எனக்கு ரூ.20 கோடி தர வேண்டும்: வெற்றிமாறனுக்கு தனுஷ் நிபந்தனை?

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments