முத்தையா மகன் அறிமுகமாகும் படம் நேரடி தொலைக்காட்சி ரிலீஸா?

vinoth
சனி, 16 நவம்பர் 2024 (09:41 IST)
வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த இயக்குனர் முத்தையா கடைசியாக இயக்கிய காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம் படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் இந்த படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் படம் வியாபாரம் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை சன் தொலைக்காட்சியில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படமும் இதுபோல நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments