Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலி ட்விட்டர் கணக்கு - இயக்குனர் ஹரி சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

போலி ட்விட்டர் கணக்கு - இயக்குனர் ஹரி சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
, சனி, 27 ஜூன் 2015 (19:11 IST)
சினிமா பிரபலங்கள் பெயரில் போலி ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் தொடங்கி அவதூறுகள் பரப்பி வருகின்றனர். இயக்குனர் ஹரி பெயரிலும் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹரி கையெழுத்திட்ட புகார் மனுவை அவரது உதவியாளர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது.

சாமி, சிங்கம் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களை நான் இயக்கி உள்ளேன். டுவிட்டர் இணையதளத்தில் எனது பெயரில் போலி முகவரி தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அவதூறான தகவல்கள் எனது பெயரில் பரப்பப்படுகிறது. இது தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது சினிமா இயக்குனர் தொழிலுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போலி இணையதள முகவரியை முடக்கி, இதை எனது பெயரில் தொடங்கியவர் யார் என்று கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து ஹரி பெயரிலுள்ள போலி ட்விட்டர் முகவரி மூடப்பட்டது. அதை தொடங்கியது யார் என க்ரைம் பிராஞ்ச் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil