Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

vinoth
சனி, 5 ஏப்ரல் 2025 (09:27 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தெதி திரையரங்குகளில் ரிலீஸானது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்து, சில ஆண்டுகள் காத்திருந்து இந்த படத்தை ரிலீஸ் செய்தார். அந்த  நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தகன் திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களையும் கௌரமான வசூலையும் பெற்றது.

இதையடுத்து பிரசாந்த் இனிமேல் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பேன் எனக் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து 23 ஆண்டுகளுக்கு முன்னர் ‘தமிழ்’ என்ற படத்தில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?...வெளியான தகவல்!

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments