மூன்றாவது முறையாக இணையும் இயக்குனர் ஹரி & விஷால்… ஷூட்டிங் எப்போது?

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (11:10 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட ’அருவா’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது. இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும் ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

அதனால் திரைத்துறையில் அவருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் ரிலீஸாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்தபடத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் ஜூலை மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதற்குள் விஷால் மார்க் ஆண்டனி படத்தை முடித்துவிட்டு வருவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments