Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்துவட்டி புகார் திடீர் வாபஸ்: அன்புச்செழியனுக்கு குவியும் ஆதரவு

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (08:30 IST)
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு பின்னர் விஷால், அமீர் உள்பட திரையுலகினர் பலர் கொந்தளித்தபோது பைனான்சியர் அன்புச்செழியன் மீது புகார்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக இதுவரை சசிகுமார் புகார் தவிர வேறு எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை

இந்த நிலையில் 'மாயவன்' திரைப்படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார், நேற்று அன்புச்செழியன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொடுத்த புகாரை திடீரென வாபஸ் பெற்றுள்ளார். தன்னுடைய மாயவன்' படத்தை வெளியிட தடையில்லா சான்றிதழை அன்புச்செல்வன் தரப்பு வழங்கிவிட்டதாகவும், தன்னுடைய நிதி ஆவணங்களையும் கோபுரம் பிலிம்ஸ் வழக்கறிஞர்கள் ஒப்படைத்துவிட்டதாகவும், இதன் காரணமாக தான் அன்புச்செழியன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் அன்புச்செழியனுக்கு திரையுலகினர்களின் ஆதரவு குவிந்து வருவதாகவும், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டாலும் அவர் மீதுள்ள வழக்குகள் பிசுபிசுத்துவிடும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை நஸ்ரியாவுக்கு மனநிலை கோளாறா? மன்னிப்பு கேட்டு வெளியிட்ட கடிதத்தால் பரபரப்பு..!

புஷ்பா 2 படத்தில் என் இசை ஏற்கப்படவில்லை… இசையமைப்பாளர் தமன் பகிர்ந்த தகவல்!

நரைத்த முடியுடன் உள்ள நபர் தாலி கட்டினார்.. விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம்..

Outdated இயக்குனரோடு சேராதீர்கள்… இணையத்தில் எழுந்த கமெண்ட்களுக்கு VJS பதில்!

எனக்கு பாலோயர்கள் இருப்பதால் டிக்கெட் விற்குமா?... சமூக ஊடகங்கள் குறித்து பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments