Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோற்றுப்போய் விட்டேன்; இனிமேல் வேற மாதிரி : அதிரடி காட்டும் சேரன்

Webdunia
புதன், 24 மே 2017 (11:25 IST)
சமூக பிரச்சனைகளை தனது திரைப்படங்களில் பிரதிபலிக்கும் இயக்குனர் சேரன், ஆட்டோகிராப் படத்திற்கு பின் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். அதில் சில வெற்றி பெற்றன. சில படங்கள் தோல்வி அடைந்தன.


 

 
கடைசியாக அவர் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கினார். அதன் பின் கடந்த சில வருடங்களாக எந்த படத்தையும் இயக்கவில்லை. சினிமாவில் நடிக்கவில்லை.
 
இந்நிலையில், அவர் தன்னுடய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
என் இதயம் நிறைந்த அன்பு ரசிகர்களே தொடர்ந்து எனக்கும் என் திரைப்படங்களுக்கும் ஆதரவு அளிக்கும் தமிழ் பண்பாளர்களே வணக்கம்.. 
 
“மூன்று வருடங்களாக புதிய முயற்சி என்ற நோக்கில் மலையை புரட்டிப்போட்டுவிடலாம் என முயன்று முட்டி முட்டி முடியாமல் தோற்றுப்போனேன்.. பிறகுதான் புரிந்தது இங்கே சிறுகல்லை நகர்த்தக்கூட முடியாத அளவு தவறுகளும் பொறாமையுணர்வுகளும் பரந்தமனப்பான்மை இன்மையும் புரையோடிப்போயிருக்கிறது என.. எனவே இந்த சமூக மாற்றம் என்பது ஒரு நல்லவன் நினைத்து முடியப்போவதில்லை என புரிந்தபின்... 
 
எனக்கு எது வேண்டுமோ அதை நோக்கி மட்டுமே பயணிப்பது என முடிவு செய்து இதோ திரைப்படம் உருவாக்க தயாராகிவிட்டேன். திருட்டு DVD யில் பார்த்தவர்கள் போக ஆன்லைனில் முதல்நாளே எந்த கட்டணமுமின்றி இலவசமாக பார்த்தவர்கள் போக அனுமதியின்றி பஸ்களில் படம் பார்ப்பவர்கள் போக நேர்மையாக உழைப்பை உணர்ந்து எவ்வளவுபேர் பணம் கொடுத்து படம் பார்க்கிறார்களோ அந்த பட்ஜெட்டில் மட்டுமே படம் எடுக்கலாம் என முடிவு செய்து இந்த வருடம் இரண்டு படங்கள் உருவாக்க உள்ளேன்.. எப்போதும்போல உங்கள் ஆதரவும் அரவணைப்பும் தேவை.. நன்றி.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments