Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி பேச சொல்வதுதான் பாசிசம்..! – இயக்குனர் அமீர் பாய்ச்சல்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (15:20 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக இந்தி குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில் இயக்குனர் அமீர் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படாது என தமிழக அரசு உறுதியாக உள்ள நிலையில் இந்தி அவசியமா இல்லையா என்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீப காலமாக சினிமா பிரபலங்கள் தங்களுக்கு இந்தி குறித்த இருவேறு கருத்துகளை பேசி வருவது நாளுக்கு நாள் சர்ச்சையாகி வருகிறது. இன்று ஒரு விழாவில் கலந்து கொண்டபோது பேசிய நடிகை சுஹாசினி “இந்தி பேசுபவர்கள் அனைவரும் நல்லவர்கள். அவர்களோடு தொடர்பு கொள்ள உரையாட நாம் கட்டாயம் இந்தி கற்க வேண்டும்” என பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் “எது நாடு? யார் யார் இனமக்கள்? என்பதை சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் ஆரியம் காலூன்றி வருகிறது. இந்தி பேசச்சொல்லி கட்டாயப்படுத்துவதுதான் பாசிசம்” என பேசியுள்ளார். தொடர்ந்து இந்தி குறித்து சினிமா உலகத்தினரிடையே நடக்கும் இந்த விவாதங்கள் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments