Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்தட்டு மக்களின் மூளையில் என்ன விதைத்துள்ளார்கள் என்பதன் விளைவே இது- இயக்குனர் அமீர்!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:33 IST)
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆன போது சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு ஒருசாரார் ஆதரவும் மற்றொரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் அமீர் இதுபற்றி பேசும்போது “கடந்த 10 ஆண்டுகளாக ஒரு படித்த சமூகத்தை எப்படி திசைதிருப்பியுள்ளார்கள் என்பதன் வெளிப்பாடுதான் இந்த சம்பவம்.  அங்கே இருந்தவர்கள் யாரும் படிக்காத பாமர மக்கள் இல்லை.  எல்லோருமே மேல்தட்டு மக்கள். அவர்களின் மூளையில் என்ன விதைத்துள்ளார்கள் என்பதன் வெளிப்பாடுதான் ஜெய் ஸ்ரீராம் கோஷம்.

இந்திய கிரிக்கெட் என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதல்ல.  ஒரு தனியார் அமைப்பால் உருவாக்கப்பட்டது. அனைத்து நாடுகளின் வாரியங்களும் அப்படி உருவாக்கப்பட்டவையே.  அது முழுக்க முழுக்க ஒரு வர்த்தகம். வர்த்தகத்தில் போய் தேசப் பற்றை வெளிப்படுத்துவீர்கள் என்றால் அந்த அறியாமையைக் கண்டு  நான் வருத்தப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments