Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீடு குற்றசாட்டு கூட சாதி பார்த்துதான் பெரிதாக பேசப்படுது: அமீர் வேதனை

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (17:01 IST)
பரியேறும் பெருமாள் படம் ஏற்படுத்திய தாக்கங்களை குறித்து  சென்னை வடபழனியில் கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பேசுகையில், 
 
இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியே ஆகவேண்டும். முன்பு வந்த சாதிய படங்கள் சாதியத்தை பேசினாலும் வலியை அனுபவித்து உணர்ந்து யாரும் படம் எடுக்கவில்லை. ஆனால்  இயக்குனர் மாரி செல்வராஜ் வலியை அனுபவித்து எடுத்துள்ளாத கூறினார்.
 
மேலும், மீ டூ குறித்து பேசிய இயக்குனர் அமீர், பெண்களை ஆண்கள்  யாரும் மதிப்பதில்லை என்று கூறுவது தவறு பெண்கள் பெண்களை மதிக்கிறார்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
 
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் மீ டூ-வில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார். ஆனால்  இதே பிரச்சனையில் சிக்கி உயிரிழந்த சிறுமி ராஜலட்சுமிக்கு ஆதரவு தரும் வகையில் ஏன் குரல் கொடுக்கவில்லை ராஜலட்சுமிக்கு நிகழ்ந்த நிகழ்ந்த கொடுமையை பேச முன்வரவில்லை. 
 
இங்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பெண்ணுக்கு நிகழும் கொடுமைகள் குறித்துப் பேச யாரும் முன்வருவதில்லை. இதிலும் சாதியும் பார்க்கப் படுவதாக வேதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்ஜியஸ் லுக்கில் கருநிற உடையில் கவர்ந்திழுகும் ஷ்ருதிஹாசனின் போட்டோஷூட்!

வருஷம் 2040… உலகம் எங்கயோ போயிடுச்சு… இன்னும் இவன் இத நம்பிட்டு இருக்கான்.. எப்படி இருக்கு LIK டீசர்?

மதராஸி படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள்… KPY பாலா நம்பிக்கை!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ‘திரௌபதி 2’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்