Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம்சேஞ்சர் படத்தின் தாமதத்துக்குக் காரணம் என்ன? தயாரிப்பாளர் தில் ராஜு கருத்து!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:13 IST)
இயக்குனர் ஷங்கர் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பெருமளவுகு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர் இந்தியன்  படத்தையும் அடுத்தடுத்து இயக்கி வருவதுதான். இந்தியன் 2 இப்போது மூன்றாவது பாகமும் வர இருப்பதால் மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் நாட்கள் அதிகமாகியுள்ளன. இதனால் கேம்சேஞ்சர் படத்தை முடிப்பதில் இன்னும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கேம்சேஞ்சர் படத்தின் தாமதம் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தில் ராஜு “நல்ல படங்கள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும். ராஜமௌலி மற்றும் ஷங்கர் போன்ற இயக்குனர்கள் காட்சிகள் தங்களுக்கு திருப்தியாகும் வரை எடுப்பார்கள். ஷங்கர் அர்ப்பணிப்புள்ள இயக்குனர். இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்போது படத்தின் ரிலீஸ் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments