Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிக்கலை வாழ்ந்தாங்க - பாண்டிராஜ் சொல்லும் சிம்பு, நயன்தாரா லவ் கெமிஸ்ட்ரி

நடிக்கலை வாழ்ந்தாங்க - பாண்டிராஜ் சொல்லும் சிம்பு, நயன்தாரா லவ் கெமிஸ்ட்ரி

நடிக்கலை வாழ்ந்தாங்க - பாண்டிராஜ் சொல்லும் சிம்பு, நயன்தாரா லவ் கெமிஸ்ட்ரி
, புதன், 25 மே 2016 (14:38 IST)
இது நம்ம ஆளு வரும் 27 வெளியாகிறது. முன்னாள் காதலர்களின் திரைக்காதலைப் பார்க்க ரசிகர்கள் தயார். 


 
 
சிம்பு, நயன்தாரா காதல் காட்சிகள் எப்படி வந்திருக்கின்றன என படத்தின் பாண்டிராஜ் கூறினார்.
 
"சட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த  50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம். 
 
படத்தில் நாயகன், நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. அவர்களின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்" என்றார்.
 
பிடிக்கிற மாதிரி இருந்தா சரிதான்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆனந்தி இருக்கார் குமாரு...