Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு இறுதியில் துருவ நட்சத்திரம்… நம்பிக்கை தெரிவிக்கும் கௌதம் மேனன்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (10:54 IST)
துருவ நட்சத்திரம் படத்தை இந்த ஆண்டு இறுதியில் எப்படியும் வெளியிடும் முடிவில் கௌதம் மேனன் திட்டம் தீட்டி வருகிறார்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் பணப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன். இப்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல வருடங்களாக இந்த படம் முடியாமல் இருப்பதற்குக் காரணம் இயக்குனர் கௌதம் மேனன்தானாம். இந்நிலையில் இந்த படம் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் நீளம் 4 மணிநேரத்துக்கு மேல் உள்ளதால் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்து இந்த ஆண்டு இறுதியில் எப்படியாவது வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments