லாக்டவுன் நேரத்தில் ரிலிஸுக்கு தயாராகும் விக்ரம் படம்! இயக்குனர் தகவல்!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:38 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ரிலிஸ் பணிகள் நடந்து வருவதாக இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் பணப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன். இப்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் பற்றிய முக்கிய அப்டேட்டை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில் அதை அவர் வெளியிட்டுள்ளார். கௌதம் மேனன் தயாரித்த நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் நரகாசூரன் ஆகிய படங்களும் ரிலிஸாகாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments