துருவ நட்சத்திரம் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (14:24 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் மிகப் பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் திரையரங்க உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை ஆகியவையும் பெரிய தொகைக்கு வியாபாரம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments