Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ நட்சத்திரம் படத்தின் மீது 60 கோடி ரூபாய் கடன் உள்ளது… தயாரிப்பாளர் கே ராஜன் தகவல்!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (10:54 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24 (நேற்று) ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.

துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதையடுத்து டிசம்பர் 8 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளரும் பைனான்சியருமான கே ராஜன் “துருவ நட்சத்திரம் இவ்வளவு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் ரிலீஸ் ஆகாமல் தவித்து வருகிறது. அதற்குக் காரணம் அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான கௌதம் மேனனுக்கு 60 கோடி ரூபாய் கடன் இருப்பதுதான். இது சம்மந்தமான வழக்கு திரைப்பட சங்கத்தில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை.. திடீரென வாபஸ் பெற்றதால் பரபரப்பு..!

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி.. என்ன காரணம்?

என் தந்தை ஒரு லெஜெண்ட்; பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்.. ஏஆர்.ரஹ்மான் மகன்

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மாடர்ன் உடையில் மிரட்டும் போஸ்களில் ரைஸா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments