Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மக்கள் என்னை தத்தெடுத்துக் கொண்டார்கள்… எல் ஜி எம் இசை வெளியீட்டில் தோனி நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (07:12 IST)
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தோனி தன் மனைவி சாக்‌ஷியோடு கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய தோனி “சென்னைக்கும் எனக்கும் நீண்ட பந்தம் உருவாகிவிட்டது. சென்னையில் தான் என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். சென்னையில்தான் என்னுடைய டெஸ்ட் இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்கோரை அடித்தேன்.  சென்னை மண் எனக்கு எப்போதும் முக்கியமானது. இப்போது என்னுடைய முதல் தயாரிப்பும் தமிழில்தான் நடக்கிறது. சென்னை மக்களால் நான் எப்போதே தத்தெடுக்கப் பட்டுவிட்டேன்” எனப் பேசினார்.

எல் ஜி எம் திரைப்படம் ஜூன் மாத இறுதியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று வெளியான டிரைலர் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments