Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் இன்று யாருடைய உறவினர்கள்?

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (09:18 IST)
பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று முன்தினம் முகின் தாயார் மற்றும் சகோதரி வருகை தந்தனர் என்பதும், நேற்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் வருகை தந்தனர் என்பதும் தெரிந்ததே. நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவுக்கு கூறிய அறிவுரை மற்றும் கவினிடம் அவர் நடந்து கொண்ட இயல்பான முறை, சேரனிடம் கொண்ட நட்பு ஆகியவை நிகழ்ச்சியை நெகிழ்ச்சிப்படுத்தியது 
 
போட்டியை போட்டியாக மட்டும் பார்த்துக்கொண்டு யாரிடம் உறவு வைக்காமல் நீ மீண்டும் பழைய லாஸ்லியாவாக எங்களிடம் திரும்பி வரவேண்டும் என்று லாஸ்லியாவின் தந்தையார் கூறியதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.  மேலும் லாஸ்லியாவின் தங்கைகளின் சுட்டித்தனம், அம்மாவின் பாசம் ஆகியவை இப்படி ஒரு குடும்பம் தங்களுக்கும் இருக்காதா என்று அனைவரையும் ஏங்க வைக்கும் அளவிற்கு நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது
 
இந்த நிலையில் இன்று யாருடைய உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவார்கள் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோ மூலம் தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகின்றனர். மேலும் இன்று தர்ஷினின் அம்மா பிறந்தநாள் என்பதையும் ஞாபகப்படுத்திய சாண்டி, அவருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். தனது தாயாரையும் தங்கையையும் பார்த்த தர்ஷன் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று உள்ளார். மொத்தத்தில் இந்த வாரம் முழுவதுமே பிக்பாஸ் வீடு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமின்றி சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Full Vibe மாமே..! இறங்கி சம்பவம் செய்த அஜித்..! ‘Good Bad Ugly’ விமர்சனம்..!

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments