Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படத் தயாரிப்பில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்… இயக்குனர் இவர்தான்!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (07:41 IST)
தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படங்களைத் தயாரித்து வந்தார். மிகக்குறைந்த காலத்திலேயே இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 20 படங்களைத் தயாரித்திருந்தார். இதில் ரஜினியின் காலா படமும் அடக்கம். அவர் கடைசியாக தயாரித்த காலா திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பொருளாதார ரீதியாக நஷ்டமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

சிலப் படங்கள் பெரியளவில் நஷ்டத்தை அளித்ததும் மற்றும் அந்நிறுவனத்தில் தனுஷின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சில நிர்வாகிகள் கணக்கு வழக்குகளில் கையாடல் செய்துள்ளதாலும் தனுஷ் பயங்கர அப்செட்டில் இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் கடந்த சில வருடங்களாக வுண்டர்பார் நிறுவனம் இயங்கவே இல்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் வுண்டர்பார் பிலிம்ஸுக்கு தனுஷ் உயிர் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் முதல் படமாக மாரி செல்வராஜ்  இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments