Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்க்கு வாழ்த்து சொல்லி பல்பு வாங்கிய தனுஷ்....

விஜய்க்கு வாழ்த்து சொல்லி பல்பு வாங்கிய தனுஷ்....
, புதன், 21 ஜூன் 2017 (14:05 IST)
நடிகர் விஜய்க்கு ஒரு நாளைக்கு முன்பே பிறந்த நாள் வாழ்த்து கூறிய தனுஷை டிவிட்டரில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.


 

 
நடிகர் விஜய் தனது பிறந்த நாளை வருகிற 22ம் தேதி அதாவது நாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் நேற்று  இரவு 12 மணியளவில் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
 
அதில் “ பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். கடினமாக உழைக்கும் அற்புதமான மனிதர் நீங்கள். எப்போதும் உங்களை எனக்கு பிடிக்கும். நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.
 
உடனே, விஜயின் பிறந்த நாள் நாளை என்பது தெரியாமல் தனுஷ் வாழ்த்து கூறியிருக்கிறார் என நெட்டிசன்கள் அவரை கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்.

webdunia

 

 
“கரெக்டா 12 மணிக்கு வாழ்த்து சொல்றாராம்.. நாளைக்கு தானே பொறந்தநாளு. உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” என டிவிட் போட்டு வருகின்றனர்.
 
இதில் ஒருவர் “என்ன புரோ சரக்கா?..விஜயோட பிறந்தநாள் ஜூன் 22 தானே” என ஒருவர் கலாய்த்துள்ளார்.

webdunia

 

 
இதில் சிலர் விஜய் அழுவது போன்ற புகைப்படங்களை மீம்ஸாக தயார் செய்து பதிவு செய்துள்ளனர்.
 
இப்படி வாய் விட்டு மாட்டிக் கொண்டாரே தனுஷ்...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துல்கர் சல்மானைக் காதலிக்கும் சாய் தன்ஷிகா