Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்த் தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு!

vinoth
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (15:24 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவான குபேரா படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்கவுள்ளதால் அந்த படப்பிடிப்புக்கு தனுஷ் சென்றுள்ளதால் இந்த படத்துக்கு தற்காலிக இடைவெளி விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

தயாரிப்பாளர் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?... கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி இதுதான்!

பாரதிராஜா வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளையராஜா!

Full Vibe மாமே..! இறங்கி சம்பவம் செய்த அஜித்..! ‘Good Bad Ugly’ விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments