Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ், விஜய் சேதுபதி மோதலா? - தயாரிப்பாளர் விளக்கம்

தனுஷ், விஜய் சேதுபதி மோதலா? - தயாரிப்பாளர் விளக்கம்

தனுஷ், விஜய் சேதுபதி மோதலா? - தயாரிப்பாளர் விளக்கம்
, வியாழன், 21 ஜூலை 2016 (10:33 IST)
சுதந்திரதினத்தை முன்னிட்டு தனுஷின் தொடரி மற்றும் விஜய் சேதுபதியின் தர்மதுரை ஆகிய படங்கள் மோதவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது உண்மையா?


 
 
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் தொடரி படத்தை ஆகஸ்ட் 12 வெளியிட திட்டமிட்டு வேலைகள் நடந்து வருகின்றன. அதேநாளில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்துள்ள தர்மதுரை படத்தையும் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் அதனை மறுத்துள்ளார்.
 
தர்மதுரை படத்தின் பாடல்களை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டு படத்தை செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலியை திரையிட கர்நாடக வர்த்தக சபை எதிர்ப்பு