Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காக்கா முட்டை பாடல்கள் வெளியீட்டு விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு

Webdunia
புதன், 6 மே 2015 (12:45 IST)
தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை சர்வதேச விருதுகளுடன் 2014 -ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் இப்படம் வென்றது. படத்தில் நடித்த இரு சிறுவர்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. 
காக்கா முட்டை விரைவில் திரைக்கு வருகிறது. சென்னையில் இதன் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
 
இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், நானும் எனது அண்ணனும் வாழ்ந்த வாழ்க்கைதான் காக்கா முட்டை. எங்களது லைப் ஸ்டைல், வசித்த இடம், வாழ்ந்த உணர்வுகளை இந்தப் படம் தந்தது. நான் வறுமை, இன்ப வாழ்க்கை இரண்டையும் அனுபவித்துள்ளேன் என்றார்.
 
மேலும், படத்தில் நடித்த இரு சிறுவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாகவும், அவர்கள் நடிக்க விருப்பப்பட்டால் அதற்கும் உதவுவதாகவும் தனுஷ் தெரிவித்தார்.

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

Show comments