Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா படத்தில் சின்ன வயது ரஜினியாக நடிக்கும் தனுஷ்?

காலா படத்தில் சின்ன வயது ரஜினியாக நடிக்கும் தனுஷ்?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (15:33 IST)
கபாலி படத்தை இயக்கிய ப.ரஞ்சித் மீண்டும் ரஜினியை வைத்து காலா கரிகாலன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷின் வுண்டர் பார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.


 
 
காலா கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. படம் குறித்து அறிவிக்கப்பட்டது முதல் அந்த படத்தின் கதை பற்றியும் படத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் இணையத்தில் பல தகவல்கள் வலம் வருகின்றன.
 
இந்நிலையில் தற்போது புதிய செய்தியாக காலா கரிகாலன் படத்தில் நடிகர் தனுஷும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ப.பாண்டி திரைப்படத்தில் சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷ் நடித்திருப்பார். இது நல்ல வரவேற்பையும் பெற்றது.
 
அதே போல காலா கரிகாலன் படத்தில் பிளாஷ்பேக்கில் சின்ன வயது ரஜினியாக தனுஷ் நடிப்பார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிப்பும் வெளியாகவில்லை.

பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments