Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாணாவிலிருந்து எஸ்கேப் ஆகிறாரா தனுஷ்...?

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2014 (10:13 IST)
சிவ கார்த்திகேயன் - தனுஷ் நட்பு புட்டுகிச்சி. டாணா படத்தை தனுஷ் கைகழுவிட்டார். டாணா வெளியாகிற அதேநாள் அனேகனை களமிறக்கி டாணாவுக்கு ஆப்பு வைக்க தனுஷ் திட்டம்....
 
இந்தரீதியில் செய்திகள் வெளியாக ஆரம்பித்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. சர்ச்சையில் சம்பந்தப்பட்ட சிவ கார்த்திகேயனும், தனுஷும் கம்மென்று இருக்கிறார்கள். அழுத்தி கேட்டால், சே... அப்படியெல்லாம் எதுவுமில்லை என்ற பதில்தான் வருகிறது.
எதிர்நீச்சல் படத்தை தயாரித்து சிவ கார்த்திகேயனின் வளர்ச்சிக்கு முன்னெத்தி ஏராக இருந்தவர் தனுஷ். வரம் தந்தவர் தலைக்கே விலைபேசிய மாதிரி வளர்த்துவிட்ட தனுஷைவிட வியாபாரத்தில் வளர்ந்து நின்றார் சிவ கார்த்திகேயன். வேலையில்லா பட்டதாரியை விலை பேசியவர்கள் அந்தப் படத்தைவிட டாணாவுக்குதான் அதிக விலை வைத்ததாகவும், தொலைக்காட்சி உரிமைகூட டாணாவுக்குதான் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த காரணங்களால் சிவ கார்த்திகேயனை முடக்கப் பார்க்கிறார் தனுஷ். அதற்காக டாணா படத்தைக்கூட கைவிட்டு விட்டார் என்றும் கூறுகிறார்கள். டாணாவின் விநியோக உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கியுள்ளார். அதனை வைத்தே இந்த மாதிரி வதந்திகள் கிளம்புகின்றன. 
 
வதந்தி உண்மை இல்லையா என்பது இன்னும் சில வாரங்களில் தெளிவாகிவிடும்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments