Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காக்கா முட்டைக்கு தேசிய விருது - இயக்குனர் மற்றும் சிறுவர்களுக்கு தனுஷ் தங்க சங்கிலி பரிசு

காக்கா முட்டைக்கு தேசிய விருது - இயக்குனர் மற்றும் சிறுவர்களுக்கு தனுஷ் தங்க சங்கிலி பரிசு
, வெள்ளி, 27 மார்ச் 2015 (09:42 IST)
காக்கா முட்டை படம் சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான தேசிய விருதை பெற்றுள்ளது. அதில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.


 
மணிகண்டன் இயக்கியிருக்கும் காக்கா முட்டை படத்தை தனுஷின் வுண்டர்பாரும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட்டும் இணைந்து தயாரித்தன. விருது கிடைத்ததையடுத்து, காக்கா முட்டையை இயக்கிய மணிகண்டனுக்கும், தேசிய விருது பெற்ற சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் நடிகர் தனுஷ் தங்க சங்கிலி பரிசளித்தார். 
 
காக்கா முட்டையின் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil