Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோபோவை வேண்டாம் என நிராகரித்த தனுஷ்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (17:06 IST)
தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 21 ஆம் தேதி மாரி 2 படம் வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். 
 
இந்நிலையில், தனுஷ் சமீபத்திய பேட்டியில் ரோபோவை வேண்டாம் என நிராகரித்ததாக கூறியுள்ளார். ரோபோன்னா எந்திரன் இல்லங்க ரோபோ ஷங்கர். இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் கூறிய காரணம் பின்வருமாறு, 
 
மாரி படத்தில் நீங்கள் 2 பேரை அடித்துக் கொண்டே இருப்பீர்கள் என்றார் இயக்குனர். அதில் ரோ போ ஷங்கரும் ஒருவர். ரோபோ ஷங்கர் சைஸ் என்ன, என் சைஸ் என்ன நான் எப்படி அவரை அடித்துக் கொண்டே இருப்பது. இதெல்லாம் சரி வராது படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று நான் ஒத்தக் காலில் நின்றேன். 
இல்லன்னா நம்ம அடித்தால் வாங்குகிற மாதிரி சைஸில் ஒரு ஆளை பாருங்கள் என்றேன். ஆனால் பாலாஜி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ரோபோவையே அடிங்க எல்லாம் சரியாக வரும் என்றார். இதனால் நான் தனியாக ஹோம் ஒர்க் பண்ணினேன். அவ்வளவு பெரிய உருவத்தை நம்பும்படி எப்படி அடிப்பது என்று என தனுஷ் தெரிவித்துள்ளார். 
 
மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments