Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2015 பிப்ரவரி 6 இல் வெளியாகும் தனுஷ் படம்

2015 பிப்ரவரி 6 இல் வெளியாகும் தனுஷ் படம்
, புதன், 20 ஆகஸ்ட் 2014 (11:56 IST)
பால்கி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ஷாமிதாப் இந்திப் படம் 2015 பிப்ரவரி 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ராஞ்சனா படத்திற்கு கிடைத்த அபிரிதமான பாராட்டுகளுக்குப் பிறகு தனுஷ் இந்தியில் நடிக்கும் இரண்டாவது படம், ஷாமிதாப். பால்கியின் முதலிரு படங்களில் நடித்த அமிதாப்பச்சன் இதிலும் இருக்கிறார்.

கமலின் இளைய மகள் அக்ஷரா இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். படத்தில் தனுஷுக்கு வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரம் என கூறப்படுகிறது.

பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளனர் இளையராஜா, ஆஸ்தான கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் என அதே பழைய டீம்.

சீனி கம், பா ஆகிய பால்கியின் முந்தையப் படங்கள் இந்தியில் அழுத்தமான சலனத்தை ஏற்படுத்தின. ஷாமிதாப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகமிருப்பதற்கு அவரது முந்தைய இரு படங்களும் முக்கிய காரணம்.

2015 பிப்ரவரி 6 ஆம் தேதி ஷாமிதாப் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil