Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் விஐபி 2 படப்பிடிப்பை தொடங்கி வைத்த சூப்பர் ஸ்டார்!!

தனுஷின் விஐபி 2 படப்பிடிப்பை தொடங்கி வைத்த சூப்பர் ஸ்டார்!!
, வியாழன், 15 டிசம்பர் 2016 (11:30 IST)
தனுஷ் நடிக்கும் வேலையில்லாத பட்டதாரி 2 ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்று துவக்கி வைத்தார். இதற்கு ரஜினிக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.


 
வேலையில்லாத பட்டதாரி முதல் பாகத்தில் தனுஷ் மற்றும் அமலா பால் நடித்து இருந்தனர். இந்தப் படம் இளைஞர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் தனுஷ் மற்றும் அமலா பால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க, ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.

webdunia

 
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தனுஷின் மாமனாரும், தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் இன்று தொடங்கி வைத்தார். அப்போது லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா, தாணு ஆகியோர் உடன் இருந்தனர். இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள தனுஷ், “தலைவா... இதற்கு மேல் நான் உங்களிடம் என்ன கேட்கப் போகிறேன்” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணமா, ரசிகர்களா? எது முக்கியம்: ஹன்சிகா கூறும் பதில்!